postal workersவரும் செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி அகில இந்திய அளவில் அஞ்சல்துறை தொழிற்சங்கள் வேலைநிறுத்தம் செய்யவுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த வேலை நிறுத்தத்தில் தமிழக தொழிற்சங்களும் கலந்து கொள்ள உள்ளன. அந்நிய முதலீடு உட்பட மத்திய அரசின்  தொழிலாளர் விரோதப்போக்கை கண்டித்து இந்த வேலைநிறுத்தம் நடைபெற உள்ளதாகவும், இந்த வேலை நிறுத்தத்தில் பங்ேகற்க உள்ள அஞ்சல் துறை தொழிற்சங்கங்கள் தமிழ்நாடு முழுவதும் தொழிலாளர்களிடையே பிரசாரம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

பொதுத்துறை நிறுவனங்களில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி, ஆட்குறைப்பு, பொதுத்துறை நிறுவனங்களை நலிவடைய வைக்கும் முயற்சி, தொழிலாளர் நலச்சட்டங்களில் திருத்தம் என மத்திய அரசின் தொழிலாளர் விரோதப்போக்கை கண்டித்தும், மக்களை பாதிக்கும் விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வரும் செப்.2ம் தேதி  பாதுகாப்பு, வருவாய், அஞ்சல், தொலைத் தொடர்பு உள்பட மத்திய அரசு துறைகளின் தொழிற்சங்கங்களும், மாநில அரசுத் துறைகளின் தொழிற்சங்கங்களும் இணைந்து நாடு தழுவிய அளவில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் ெசய்ய உள்ளனர்.

இந்நிலையில்  அஞ்சல் துறை தொழிற்சங்கங்கள் அனைத்தும்  இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கப் போவதாக அதன் தலைவர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இதனை அடுத்து தொடர்ச்சியாக   ஆக.24ம் தேதி முதல் ஆக.29ம் தேதி வரை தமிழகம் முழுவதும் அஞ்சல் துறை ஊழியர்கள், தொழிலாளர்களிடையே  பிரசாரம் செய்ய உள்ளதாகவும், அப்போது அஞ்சல் கோட்ட வாரியாகவும், ஒவ்வொரு தலைமை அஞ்சலகம் முன்பும் வாயில் கூட்டங்கள் நடத்தி, ‘வேலை நிறுத்ததிற்கான அவசியம்’ குறித்து தொழிலாளளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆதரவு திரட்ட உள்ளதாகவும் அஞ்சல் துறை தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவத்துள்ளனர்.

English Summary:Postal workers strike in the whole India, including Tamil Nadu on sep2.