சூர்யா நடிப்பில் விக்ரம்குமார் இயக்கவிருக்கும் ’24’ என்ற படத்தின் தலைப்பு மற்றும் படத்தின் லோகோ ஆகியவற்றை மாற்றும்படி சமீபத்தில் பாலிவுட் நடிகர் அனில்கபூர் சூர்யாவிடம் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியான நிலையில் சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள ‘மாஸ்’ படத்தின் டைட்டிலும் மாற்றப்படும் என செய்திகள் கூறுகின்றன.
‘மாஸ்’ என்பது ஆங்கில வார்த்தையாக இருப்பதால் இந்த படத்திற்கு தமிழக அரசின் வரிவிலக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால் படத்தின் தலைப்பை மாற்ற இயக்குனர் வெங்கட்பிரபு உள்பட படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த செய்தியை வெங்கட்பிரபு உறுதி செய்யவில்லை.
மேலும் இந்த படம் திகில் மற்றும் சஸ்பென்ஸ் படமாக இருப்பதால் படத்தில் ‘யு’ சர்டிபிகேட் கிடைக்குமா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. வரும் மே மாதம் 1ஆம் தேதி வெளிவர இருக்கும் இந்த படத்தில் சூர்யா, நயன்தாரா, ப்ரணிதா, பிரேம்ஜி அமரன், பார்த்திபன் மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்துள்ளது.
English Summary :