policeமாநில அளவில் ஒவ்வொரு வருடமும் போலீஸ் பணித்திறன் போட்டிகள் நடைபெறுவதுண்டு. இந்த போட்டியில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பணிபுரியும் போலீஸார் கலந்து கொள்வதுண்டு. இந்த வருடம் நடைபெற்ற இந்த போலீஸ் பணித்திறன் போட்டி சென்னை வண்டலூரில் உள்ள போலீஸ் அகாடமியில் கடந்த 12ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.

அறிவியல் ரீதியான புலனாய்வு, கம்ப்யூட்டர் விழிப்புணர்வு, நாசவேலை தடுப்பு மற்றும் மோப்ப நாய்களின் சாகசம் போன்ற பல பிரிவுகளில் இந்த போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் சென்னை நகர போலீஸ் அணி சார்பில் 67 பேர் கலந்து கொண்டனர்.

நேற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் பதக்கம் பெற்றோர்களின் விபரங்கள் நேற்றைய இறுதி நாளில் அறிவிக்கப்பட்டது. இதில் 8 தங்கம், 9 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 21 பதக்கங்களை குவித்து சென்னை நகர போலீஸ் அணி சாதனை படைத்தது.

போட்டிகளை வென்ற காவல்துறையினர்களுக்கு நேற்று டி.ஜி.பி. அலுவலகத்தில் பரிசளிப்பு விழா நடத்தப்பட்டது.

சென்னை நகர போலீஸ் அணிக்கு டி.ஜி.பி. அசோக்குமார் கேடயங்களை வழங்க, அவற்றை கமிஷனர் ஜார்ஜ் பெற்றுக் கொண்டார். விழாவில் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி. கரன்சின்கா, ஐ.ஜி. மகேஷ்குமார்அகர்வால், சென்னை மத்தியகுற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து சென்னை நகர போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary:Match of the police force in 2015 .Chennai team firat place