ilayaraajaசமீபத்தில் வெளிவந்த ‘காக்கா முட்டை’ திரைப்படம் தேசிய விருது உள்பட பல சர்வதேச விருதுகளையும் பெற்று படக்குழுவினர் அனைவருக்கும் பெருமை சேர்த்தது. இந்த படத்தை இயக்கிய மணிகண்டன் என்பவருக்கு தயாரிப்பாளர்கள் தனுஷ், வெற்றிமாறன் உள்பட அனைவரும் பாராட்டுக்களை தெரிவித்தனர். இந்நிலையில் மணிகண்டன் ‘குற்றமே தண்டனை’ என்ற படத்தை இயக்கவுள்ளார்.

விதார்த் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே  ‘காக்கா முட்டை’ படத்தில் மிக அபாரமாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு இசையமைக்க இசைஞானி இளையராஜாவை மணிகண்டன் அணுகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் பாடல்களே இல்லை என்பதால் முதலில் இசையமைக்க யோசித்த இளையராஜா, பின்னர், பின்னணி இசைக்கு இந்த படத்தில் நல்ல ஸ்கோப் இருப்பதை திரைக்கதை மூலம் அறிந்து கொண்டு படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும்  ‘குற்றமே தண்டனை’ என்ற படத்தை முடித்துவிட்டு, இயக்குனர் மணிகண்டன் ஒரு முழுநீள காமெடி திரைப்படத்தை இயக்கவுள்ளதாகவும், அதில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை மதுரையை சேர்ந்த பிரபல விநியோகிஸ்தர் அன்பு தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

English Summary: kakkamuttai director and ilayaraja joins for next flim