முக்கியமான தலைவர்கள், ஞானிகள், முனிவர்கள் ஆகியோர்களின் பிறந்த நாளில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் வடலூர் மற்றும் சென்னையில் வாழந்த இறையடி தொண்டர் ராமலிங்க அடிகள் நினைவுநாளை ஒட்டி ஜனவரி 24ஆம் தேதி அனைத்து இறைச்சி கடைகளும் மூடப்பட வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி கமிஷனர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:- வடலூர் ராமலிங்கர் நினைவு நாளை முன்னிட்டு 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத்துறை (கால்நடை மருத்துவப்பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து இறைச்சிக்கூடங்கள் அரசு ஆணையின்படி மூடப்படுகின்றன.
இதே போல் ஆடு, மாடு, இதர இறைச்சி விற்பவர்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டு உள்ளது. எனவே, அரசு ஆணையின்படி கண்டிப்பாக 24-ந்தேதி அனைத்து இறைச்சிக்கூடங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்பனை செய்யக்கூடாது.
அரசு ஆணையினை செயல்படுத்த வியாபாரிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
English Summary : Chennai Corporation issued a ban for meat to sell on January 24th.