சமூக வலைத்தளங்களில் ஃபேஸ்புக், டுவிட்டர் ஆகியவற்றை அடுத்து வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்தது வாட்ஸ் அப் என்பது அனைவரும் அறிந்ததே. இதன் அசுர வளர்ச்சியை பார்த்து இந்நிறுவனத்தை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கிவிட்டது. இந்நிலையில் வாட்ஸ் அப்பை பயன்படுத்த குறைந்த பட்ச கட்டணமாக ரூ. 67 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த சேவை உலகம் முழுவதும் இலவச சேவையாக வழங்கப்படவுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ‘வாட்ஸ்அப்’ இணை நிறுவனர் ஜன்கோப் என்பவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, ”வாட்ஸ்அப்’ கட்டணம் செலுத்த பெரும்பாலானவர்களிடம் ‘கிரிடிட் கார்டு’ வசதி இல்லாததால் பெரும் சிரமம் ஏற்படுகிறது. அதனால் சந்தாவாக வசூலிக்கப்படட தொகை இனி வசூலிக்கப்படாது’ என தெரிவித்தார். இந்த அறிவிப்பால் ‘வாட்ஸ்அப்’ பயன்படுத்துவோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி இனிவரும் காலங்களில் வாட்ஸ் அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

நகர மக்களை மட்டுமின்றி கிராமங்களையும் வாட்ஸ் அப் மிக எளிதாக சென்றடைவதால் எல்லோரும் ‘வாட்ஸ்அப்’ வசதியைப் பெற ஸ்மார்ட் போனுக்கு மாறி வருகின்றனர். ‘வாட்ஸ்அப்’ என்னும் தகவல் தொழில் நுட்பம் உலக நாடுகள் முழுவதும் பரவி தகவல் பரிமாற்றத்தால் முன்னணியில் உள்ளது. இண்டர் நெட், முகநூல் ஆகிய தகவல் பரிமாற்ற வசதிகளை விட இது விரைவில் எளிதாக சென்றடைவதால் உலகளாவிய அளவில் வாட்ஸ்அப்பிற்கு அதிக மவுசு கிடைத்துள்ளது. சமீபத்தில் சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோது மீட்புப்பணிகளுக்கு பெரும்பாலும் வாட்ஸ் அப் பயன்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் புகைப்படங்கள் அரிய காட்சிகளுடன், தகவல்களும் உடனுக்குடன் உலகம் முழுவதும் பரிமாறக்கூடிய வசதி இதில் இருப்பதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எளிதாக பயன்படுத்துன்கிறனர். உலகம் முழுவதும் சுமார் 100 கோடி பேரை ‘வாட்ஸ்அப்’ கவர்ந்து இழுத்துள்ளது என்று ஒரு சர்வே கூறுகின்றது. இத்தகைய பெருமை வாய்ந்த வாட்ஸ் அப்பை இனி உலகம் முழுவதும் இலவசமாக பயன்படுத்தலாம்.

English Summary : Whatsapp users are happy to hear that now the application free of charge.