மெட்ரோ ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுக்க வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க, மொபைல்போனில் பயன்படுத்தும் ‘வாட்ஸ்ஆப்’ மூலம் டிக்கெட் எடுக்கும் வசதியை மெட்ரோ ரயில் நிறுவனம் விரைவில் கொண்டு வர உள்ளது. இதற்காக, பொதுவான எண் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த எண்ணை பயணியர் பதிவு செய்து கொண்டு, அதன் வாயிலாக டிக்கெட் எடுக்கலாம்.
புறப்படும் மெட்ரோ ரயில் நிலையம், சென்றடையும் மெட்ரோ ரயில் நிலையத்தை தேர்வு செய்து, அதற்கான கட்டணத்தை செலுத்தலாம். வாட்ஸ் ஆப் பே, ஜீ பே, நெட் பாங்கிங் ஆகியவை வாயிலாக கட்டணம் செலுத்த பயன்படுத்தலாம். இதன் வாயிலாக, வீட்டில் இருந்து புறப்படும் போதே டிக்கெட் எடுக்கலாம். பயணம் முடியும்போது, க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்து வெளியே செல்லலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி தெரிவித்துள்ளார்.