திருவண்ணாமலை திருக்கார்த்திகை மகா தீப பெருவிழாவில் மலையேறும் பக்தர்களுக்கு நிபந்தனைகள்:

  • மலையேறும் பக்தர்கள் ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அட்டை ஏதாவது ஒன்றின் நகலை சமர்ப்பித்து அனுமதி சீட்டு பெற்று கொள்ளலாம்.
  • டிசம்பர் 6 தீப விழாவின் போது காலை 6 மணி முதல் டோக்கன்கள் வழங்கப்படும்.
    2,500 பக்தர்கள் மட்டுமே மலை ஏற அனுமதி.
  • பேகோபுரம் அருகில் உள்ள வழியில் மட்டுமே மலையேற அனுமதி; மற்ற வழிகளில் மலை ஏற கண்டிப்பாக அனுமதி இல்லை.
  • கற்பூரம், பட்டாசு மற்றும் எளிதில் தீ பற்றக் கூடிய பொருட்களை மலையில் கொண்டு செல்ல அனுமதி இல்லை.
  • அனுமதிக்கப்பட்ட கொப்பரையில் மட்டுமே நெய் ஊற்ற வேண்டும், வேறு எந்த இடத்திலும்
    நெய் தீபம் ஏற்றக்கூடாது.
  • பக்தர்கள் தண்ணீர் பாட்டில் மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதி; காலி தண்ணீர் பாட்டில்களை மலையில் இருந்து இறங்கி வரும் போது திரும்ப கொண்டு வர வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு. பா. முருகேஷ் அவர்கள்
அறிக்கை வெளியீடு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *