சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேக வைக்காமல், எண்ணெய் இல்லாமல் மூன்றரை நிமிடத்தில் 300 வகையான இயற்கை உணவுகளை தயாரித்து உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
ஜியோ இந்தியா பவுண்டேஷன் சார்பில், செப் படையல் சிவக்குமார் தூண்டுதல் பேரில் நடைபெற்ற இந்த கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில், கல்லூரி மாணவ, மாணவிகள், விமான நிலைய ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்குபெற்றனர்.
அதன்படி, கத்திரிக்காய் மில்க் ஷேக், தூயமல்லி வெண்பொங்கல், பலாப்பழ பொங்கல், பீட்ரூட் ஊறுகாய், இளநீர் ஜாம், வாழைப்பூ பொறியல் என 300 வகையான இயற்கை உணவுகள் தயாரிக்கப்பட்டன.
இவை அனைத்தும் எண்ணெய் இன்றி, நெருப்பு இன்றி தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உலகிலேயே எண்ணெய் இல்லாமல், நெருப்பு இல்லாமல் நடைபெற்ற முதல் உணவுத் திருவிழாவாகவும் இது பார்க்கப்படுகிறது.
இயற்கை காய்கறிகள், பழங்கள், உணவுப் பொருட்கள் கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வலியுறுத்தி நடத்தப்பட்ட கின்னஸ் சாதனை முயற்சியை யுனிவர்ஸல் புக் ஆஃப் ரெக்கார்ட், கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்டில் பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.