Nepal_0605சமீபத்தில் நேபாளம் நாட்டில் ஏற்பட்ட பூகம்பத்தினால் ஏராளமான மனித உயிர்களையும், கோடிக்கணக்கான மதிப்புடைய பொருட்களையும் இழந்து தவிக்கும் ஆயிரக்கணக்கான நேபாள மக்களுக்கு உலகெங்கிலும் இருந்து நிவாரண பொருட்கள் மற்றும் உதவிகள் குவிந்து வரும் நிலையில் இந்த பூகம்பத்தினால் பாதிக்கப்பட்டோர்களுக்கு சென்னையில் இருந்தும் ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் இந்திய வர்த்தக, தொழில் கூட்டமைப்பின் (ஃபிக்கி) பெண்கள் அமைப்பு சார்பில் நேற்று முன் தினம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நேபாள நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டோர்களுக்கு ரூ.3 லட்சத்து 12 ஆயிரம் காசோலையும், முக்கிய உயிர் காக்கும்  மருந்துப் பொருள்களும் வழங்கப்பட்டன.

மேலும் இந்த நிகழ்ச்சியில் நேபாள நாட்டிற்கு சென்னையில் இருந்து சுற்றுலா சென்று பூகம்பத்தில் சிக்கி, அதன் பின்னர் இந்திய மீட்புப்படையினர்களின் உதவியால் பத்திரமாக மீட்கப்பட்டு நாடு திரும்பிய தமிழர்கள், தங்களுடைய பூகம்ப அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.