தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதுமே சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக புள்ளிவிபரங்கள் கூறி வருகின்ற நிலையில் இந்த நோய் வராமல் தடுப்பதற்கும், நோய் உள்ளவர்கள் நோயில் இருந்து விடுபடவும் அரசு பல புதிய முயற்சிகளை செய்து வருகின்றது. இந்நிலையில் சர்க்கரை நோய் குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்ள புதிய அப்ளிகேஷன் ஒன்று நேற்று சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டது.
டாக்டர் மோகன்ஸ் சர்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை மையத்தின் சார்பில் இந்த அப்ளிகேஷன் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த அப்ளிகேஷன் குறித்து டாக்டர் வி.மோகன் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியபோது, “இந்தியாவில் சர்க்கரை நோய் தொடர்பான விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அப்ளிகேஷனில் சர்க்கரை நோய் குறித்த அடிப்படைத் தகவல்கள், உணவுக் கட்டுப்பாடுகள், ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கொண்டு என்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் உள்ளன.
“ஸ்மார்ட்போன்’ மற்றும்க் ஆண்ட்ராய்டு செல்போன்களில் கூகுள் ப்ளேஸ்டாரில் Dr.Mohans Diabetes Management என்ற இந்த அப்ளிகேஷனை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.
English Summary: New Application Developed for Diabetes names “Dr.Mohans Diabetes Management”, Free App introduced in Chennai.