சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கொருக்குப்பேட்டை ரெயில் நிலையம் இடையே செல்லும் ரெயில்களில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக ஏராளமான் புகார்கள் வந்ததை அடுத்து ரெயில்வே இருப்பு பாதை போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படை, சென்னை மாநகர போலீஸ் உயர் அதிகாரிகள் ஆகியோர் செய்த ஆலோசனையின்படி அந்த பகுதியில் போலீஸ் ‘பூத் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, நேற்று சென்னை சென்டிரல்- கொருக்குப்பேட்டை ரெயில் நிலையம் இடையே உள்ள போஜராஜன் நகர் என்ற பகுதியில் போலீஸ் ‘பூத்’ அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும், இந்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக யாராவது ரெயில் நிலையங்களில் சுற்றித் திரிந்தால், அவர்களை குறித்து இந்த போலீஸ் ‘பூத்’தில் புகார் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் சென்னை சென்டிரல்-கொருக்குப்பேட்டை ரெயில் நிலையம் இடையே ரோந்து பணியை மேற்கொள்வார்கள் என்றும் ரெயில்வே இருப்பு பாதை போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நடவடிக்கையின் காரணமாக இனிமேல் இந்த பகுதியில் குற்றங்கள் பெருமளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary : New Police Booth between Chennai Central and Korukkuppettai.