சாட்டை ,அடுத்த சாட்டை ,கமர்கட்டு , கீரிப்புள்ள, இளமி,விளையாட்டு ஆரம்பம் , அய்யனார் வீதி போன்ற பல திரை படங்களில் கதாநாயகனாக நடித்த யுவன் என்கிற அஜ்மல் கான் .இவருடைய தந்தை பிரோஸ் கான் ஒரு தொழிலதிபர் இவரும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் .

நடிகர் யுவன் என்கிற அஜ்மல் கானுக்கும், கும்பகோணம் தங்க விலாஸ் அதிபர் திரு. சாதிக் அலி மகள் ரமீசா கஹானிக்கும் நிக்கா மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தேறியது .இந்நிகழ்ச்சி விஜிபி ரீசார்ட்டில் மிகப் பிரமாண்டமான மேடை அமைத்து அதில் திரளான மக்கள் முன்னணியில் நடைபெற்றது . இந்த திருமண விழாவில் ஏராளமான அரசியல் பிரமுகர்கள் திரை நட்சத்திரங்கள் மற்றும் தொழில் அதிபர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் .இதில் அரசியல் பிரமுகர் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு ஜி. கே வாசன், நாம் தமிழர் கட்சி தலைவர் திரு .சீமான் ,விஜிபி அதிபர் திரு சந்தோசம்,Clarion பிரஸிடென்ட் ஹோட்டல் அதிபர் திரு அபூபக்கர் மற்றும் திரையுலக பிரமுகர்கள் மன்சூர் அலிகான் ,ரியாஸ்கான் ,உமா ரியாஸ்கான் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா ,மிஸ் இந்தியா சினேகா மற்றும் பல தொழிலதிபர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *