சென்னையில் வெள்ளத்தால் சிக்கி தவித்தவர்கள் பல்வேறு ஊர்களுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்ததால் சென்னை மாநகர பேருந்துகள் கடந்த நான்கு நாட்களாக இலவசமாக இயக்கப்பட்டன. இதுபோல் வெள்ளத்தில் சிக்கியவர்கள் வெளியூர்களுக்கு செல்ல வசதியாக வெளியூர்களுக்கும் இலவச பேருந்துகள் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என கோரிக்கை விடுத்து திருச்சியை சேர்ந்த வழக்கறிஞர்கள் முத்துக்கிருஷ்ணன், ராஜகோபால் ஆகியோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு இன்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. இதில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியன், சென்னை வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப இலவசமாக பஸ் வசதி செய்ய வாய்ப்பில்லை. ஏற்கெனவே கடந்த 4 நாட்களாக சென்னை மாநகரில் அரசுப் பேருந்துகள் இலவசமாக இயக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெருமளவில் பயனடைந்தனர்” என்று கூறினர்.
இதனை அடுத்து இது குறித்து ரிட்மனு தாக்கல் செய்யுமாறு திருச்சியை சேர்ந்த வழக்கறிஞர்கள் முத்துக்கிருஷ்ணன், ராஜகோபால் ஆகியோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
english summary-No possibility for free bus says Tamilnadu gov