cars-91215-1கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பொதுமக்களின் வாகனங்கள் பெருமளவு சேதமடைந்தது. வாகங்களை இழந்தவர்களும், பழுதான வாகனங்களின் உரிமையாளர்களும் இதுவரை 800 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீடு கேட்டு விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

சென்னையில் வெள்ளத்தால் வாகனங்களை இழந்த பொதுமக்கள் தற்போது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மீது தங்கள் பார்வையை திருப்பியுள்ளனர். வாகனங்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

20க்கும் மேற்பட்ட தனியார் வாகன காப்பீட்டு நிறுவனங்கள் இன்சூரன்ஸ் பாலிசிக்கான சான்றிதழ் கேட்பதாகவும், லோன் வாங்கி முறைப்படி இன்சூரனஸ் கட்டினாலும் தகுந்த ஆவணங்கள் இருந்தால் மட்டுமே இன்சூரன்ஸ் தரமுடியும் என்று சொல்வதாகவும் கூறப்படுகிறது. ஆனால் வெள்ளத்தில் ஆவணத்தையும், வாகனத்தையும் இழந்தவர்கள் என்ன செய்வதென்று புரியாமல் தவித்து வருகின்றனர்.

பொதுத்துறை பொதுகாப்பீட்டு நிறுவனங்களான யுனைடெட் இந்தியா, ஓரியண்டல், நேஷனல், நியூ இந்தியா ஆகிய இன்சூரன்ஸ் கம்பெனிகள், வெள்ளத்தால் 3,000கோடி ரூபாய் அளவிற்கு வாகன இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளன. வாகனங்களை இழந்தவர்களுக்கு ஒரு வார காலத்திற்குள் இன்சூரன்ஸ் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகளை சென்னையில் பல மையங்கள் அமைத்து செயல்படுத்தி வருவதாகவும் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
English summary-Vehicles insurance claim in recent flood in chennai