பொறியியல் படிப்புகளுக்கான பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில் இந்த ஆண்டு எந்த ஆண்டும் இல்லாத அளவில் மிகக்குறைந்த விண்ணப்பங்களே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த ஆண்டு சுமார் 80 ஆயிரம் பேர் மட்டுமே தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், விண்ணப்ப விநியோகமும் இதுவரை 2 லட்சத்தை எட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2013-14 கல்வியாண்டில் 2.35 லட்சம் விண்ணப்பங்கள் விநியோகமாகின. இதில், 1.90 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அதேபோல் கடந்த 2014-15 கல்வியாண்டில் 2.13 லட்சம் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு அதில் சுமார் 1.90 லட்சம் பேர் வரை விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்தனர். ஆனால் இந்த கல்வியாண்டில்1.87 லட்சம் விண்ணப்பங்கள் விநியோகமாகியும் இதுவரை 80ஆயிரம் விண்ணப்பங்கள் மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில் குறைந்த அளவு விண்ணப்பங்களே வந்து சேர்ந்திருந்த போதிலும் கண்டிப்பாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிக்க போவதில்லை என்று அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary : Anna university decides not to extend time for submitting B.E. application even less number of applications submitted.