கோலிவுட் இசையமைப்பாளர்களில் முன்னணி இடத்தில் இருக்கும் டி.இமான் தற்போது சுமார் பத்து படங்களுக்கும் மேல் இசையமைத்து கொண்டிருக்கும் ஒரு பிசியான இசையமைப்பாளராக உள்ளார். மேலும் இவர் இசையமைக்கும் படத்தில் இருந்து அவ்வப்போது ஒரு சிங்கிள் பாடல் வெளியாகி சமூக வலைத்தளங்களில் ஒரு புது டிரண்டையே ஏற்படுத்தி வருகிறது.

சமீபத்தில் வெளியான டண்டனக்கா..எங்க தலை டி.ஆரு சிங்கிள் டிராக்கை அடுத்து இவர் இசையமைத்த மற்றொரு சிங்கிள் டிராக் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. அதுதான் ‘மை வைப்பு ரொம்ப பியூட்டிபுல்லு பியூட்டிபுல்லு, அவளால என் லைப்பு ஆச்சு ரொம்ப கலர் புல்லு’ என்ற பாடல்.

தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து கோலிவுட்டில் ஹீரோவாகியிருக்கும் மற்றொருவரான மா.கா.ப. ஆனந்த் நடித்த பஞ்சுமிட்டாய்’ படத்தின் இடம்பெற்ற இந்த பாடல் தற்போது சூப்பர் ஹிட் ஆகி இமானின் வெற்றிப்பாடல்களின் வரிசையில் மற்றொரு பாடலாக அமைந்துவிட்டது. இந்த பாடல் அழகான மனைவி அமைந்த கணவர்களுக்கு சமர்ப்பணம் என்று டி.இமான் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary : Music Director D.Imaan’s new song from “panjumittai” was trending now. He also dedicated this song for husbands who got beautiful wife in their life.