பிரபல பாலிவுட் இணையதளமான பாலிவுட்லைப்.காம் என்ற இணையதளம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ‘தென்னிந்தியாவின் அல்டிமேட் சூப்பர் ஸ்டார்’ பட்டத்திற்கான வாக்கெடுப்பு நடத்தி அந்த பட்டத்திற்கு தல அஜீத்தை தேர்வு செய்தது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் மீண்டும் அதேபோன்ற ஒரு வாக்கெடுப்பை தற்போது நடத்தி வருகிறது.

தற்போது தென்னிந்தியாவின் மிகச்சிறந்த ஹாட் நடிகை யார்? என்ற வாகெடுப்பை நடத்தி வரும் இந்த இணையதளம் இந்த பட்டத்திற்கு தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பிரபலமாக இருக்கும் நடிகைகளான த்ரிஷா, ஸ்ருதிஹாசன், நயன்தாரா, ஸ்ரேயா சரண், அனுஷ்கா,சமந்தா, தமன்னா ஆகியோர் கொண்ட பட்டியல் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வாக்கெடுப்பில் ஏராளமான இண்டர்நெட் பயனாளிகள் தங்கள் வாக்குகளை இந்த இணையதளத்திற்கு சென்று வாக்களித்து வருகின்றனர்.

தற்போது உள்ள நிலையில் இந்த வாக்கெடுப்பில் யாரும் எதிர்பாராத வகையில் நடிகை ஸ்ரேயா 67.29% வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் உள்ள நடிகை ஸ்ருதிஹாசன் 9.44% மட்டுமே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் பல ஹிட் படங்களை கொடுத்த கத்தி நாயகி சமந்தா 2.24% வாக்குகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளார். வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருவதால் இன்னும் சில நாட்களில் இந்த பட்டத்தை பெறும் நடிகை யார் என்பது விரைவில் தெரிந்துவிடும்.

English Summary : Shreya got first place in the poll for South India’s hot actress conducted by Bollywoodlife.com.