கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் கடந்த 1ஆம் தேதி திறக்கப்பட்டு விலையில்லா புத்தகங்கள் மற்றும் நோட்டுக்கள் கொடுக்கப்பட்டவிட்ட போதிலும் இன்னும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படவில்லை. இந்நிலையில் புதிய பஸ்பாஸ் வழங்கும் வரை மாணவர்கள் பழைய பஸ் பாஸை பயன்படுத்தி இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் விவரங்கள், புகைப்படம் ஆகிய விபரங்கள் பள்ளிகளில் பெறப்பட்டு புதிய பஸ் பாஸ் ஆண்டுதோறும் அரசால் வழங்கப்படுவது வழக்கம். கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 1-ம் தேதி முதல் பெரும்பாலான பள்ளிகள் திறக்கப்படுள்ள நிலையில், புதிய பஸ் பாஸ் வழங்கும் பணியில் போக்குவரது அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆனால், பழைய பஸ் பாஸை பேருந்து நடத்துனர்கள் ஏற்க மறுத்து காசு கொடுத்து டிக்கெட் எடுக்க சொல்வதாக மாணவர்கள் மத்தியில் புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் அரசு போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர்கள் ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறும்போது, ”மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் விரைவில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை கடந்த ஆண்டுக்கான இலவச பஸ் பாஸை பயன்படுத்தி மாணவர்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்’ என்று கூறினார்.
English Summary : Transport Minister announced that Old bus pass will be allowed till new bus pass provided.