vedhalamஇந்த ஆண்டு ரிலீஸான படங்களில் ஒரே நாளில் அதிக வசூல் செய்த படங்களில் முதல் ஐந்து இடங்களில் அஜீத் நடித்த இரண்டு படங்கள் இடம்பெற்று சாதனை புரிந்துள்ளது. 2015ஆம் ஆண்டு வெளியான படங்களில் ஒரே நாளில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் வேதாளம் திரைப்படம் ரிலீஸான முதல் நாளில் ரூ.15.5 கோடி வசூல் செய்து முதலிடத்தை பிடித்துள்ளது. ரூ.11 கோடி வசூல் செய்து 2வது இடத்தி ‘என்னை அறிந்தால்’ திரைப்படமும், ரூ.10.5 கோடி வசூல் ஷங்கரின் ‘ஐ’ படம் 3வது இடத்தையும், ரூ.10 கோடி வசூல் செய்து விஜய்யின் ‘புலி’ 4வது இடத்தையும் பிடித்துள்ளது. இந்நிலையில் ‘வேதாளம்’ திரைப்படம் 2வது நாளில் ரூ.9.75 கோடி வசூல் செய்து இதே பட்டியலில் மீண்டும் 5வது இடத்தை பிடித்து சாதனை புரிந்துள்ளது.

முதல் ஐந்து இடங்களில் அஜீத் படங்கள் மூன்று இடத்தை பிடித்து சாதனை புரிந்துள்ளதால் அஜீத் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் வெளியான இரண்டு நாட்களில் ‘வேதாளம்’ திரைப்படம் ரூ.25 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ‘வேதாளம்’ படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து மீண்டும் இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கவுள்ளதாகவும், வரும் 2016ஆம் ஆண்டில் இந்த வெற்றிக்கூட்டணியின் புதிய படம் ஆரம்பிக்கபட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அஜீத்தின் அடுத்த படத்தை இயக்க பல முன்னணி இயக்குனர்கள் விருப்பம் தெரிவித்திருக்கும் நிலையில், அஜீத் என்ன முடிவெடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்நிலையில் அஜீத்துக்கு அறுவை சிகிச்சை நடைபெறவிருப்பதாகவும், இதன்காரணமாக நேற்று இரவு சென்னை தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. அஜீத் விரைவில் பூரண குணமாக அவரது ரசிகர்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

English Summary:On the same day, the highest grossing films in 2015