varuthapadatha1311152015ஆம் ஆண்டு வெளியான பல வெற்றி படங்களில் குறிப்பிட்டு சொல்லத்தக்க திரைப்படங்களில் ஒன்று ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த ‘காஞ்சனா 2’. ரூ.100 கோடி வசூல் செய்த இந்த படத்தினை இயக்கிய ராகவா லாரன்ஸ் தற்போது ‘சிங்கம் புலி’ பட இயக்குனர் சாய்ரமணி இயக்கத்தில் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ என்ற படத்தில் நடித்து வருகிறார் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன ‘பட்டாஸ்’ படத்தின் ரீமேக் ஆகும்.

இந்நிலையில் இந்த படத்தில் தற்போது சத்யராஜ் இணைந்துள்ளதாகவும், சத்யராஜுக்கு இந்த படத்தில் நெகட்டிவ் கேரக்டர் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய் நடித்து வரும் ‘விஜய் 59’ படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து வரும் சத்யராஜ் மீண்டும் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் காமெடி நடிகர் சதீஷ் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் கோவை சரளா, ஸ்ரீமான், தேவதர்ஷினி, மனோபாலா உள்பட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

பழம்பெரும் நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்ரீஷ் இசையமைக்கும் இந்த படத்தினை பிரவீன் கே.எல் எடிட்டிங் செய்கிறார். அடுத்த வாரம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளதாகவும், படப்பிடிப்பு ஐதராபாத், ஹாங்காங், சுவிட்சர்லாந்து ஆகிய இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

English Summary:Sathyaraj Act a Villain Role in Raghava Lawrence Flim.