கடந்த 1994-ம் ஆண்டோடு ஒரு ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டது. நோட்டுகள் அச்சிடும் செலவு அதிகரித்ததே இதற்க்கு காரணம். மேலும் 2 மற்றும் 5 ரூபாய் தாள்கள் அச்சிடும் பணியும் நிர்டுத்தப்பட்டது. அதற்கு இணையான நாணயங்கள் அச்சிடப்பட்டன.
21 ஆண்டுகளுக்கு பிறகு, புதிய ஒரு ரூபாய் நோட்டு அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது, 110 மைக்ரான் திண்மை கொண்ட இந்த நோட்டு, முன்பக்கத்திலும், பின்பக்கத்திலும் இளஞ்சிவப்பு மற்றும் பச்சை நிறங்களில் உள்ளது. நீர்க்குறியீட்டில், அசோகர் தூண் சின்னமும், வலதுபக்க ஓரத்தில் “பாரத்” என்ற வார்த்தை இந்தியில் மறைவாகவும் காணப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீநாத்ஜி கோவிலில் வைத்து, மத்திய நிதித்துறை செயலாளர் ராஜீவ் மெரிஷி இந்த புதிய நோட்டை வெளியிட்டார்.
மற்ற ரூபாய் நோட்டுகளில், ரிசர்வ் வங்கி கவர்னரின் கையெழுத்து இருக்கும். ஆனால், இந்த நோட்டில் மத்திய நிதித்துறை செயலாளரின் கையெழுத்து இரு மொழிகளில் இடம்பெற்றுள்ளது. இந்த புதிய நோட்டுடன், புழக்கத்தில் உள்ள பழைய ஒரு ரூபாய் நோட்டுகளும் செல்லும்.
English Summary: One Rupee notes are going to release again with new changes.