ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி மே 17ல் துவங்கி ஐந்து நாட்கள் நடக்கிறது. ஊட்டியில் கோடை சீசனை முன்னிட்டு மலர் கண்காட்சி பழக் கண்காட்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
நடப்பாண்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் ஊட்டி தோட்டக்கலைத்துறை கூட்ட அரங்கில் நடந்தது.
தோட்டக்கலைத்துறை இயக்குனர் சுப்பையன் நிருபர்களிடம் கூறுகையில் ”நடப்பாண்டு ஊட்டி தாவரவியல் பூங்காவில் 123வது மலர்கண்காட்சி மே 17 முதல் 21ம் தேதி வரை நடக்கிறது. மே 25, 26ம் தேதிகளில் குன்னுாரில் சிம்ஸ்பூங்காவில் பழக்கண்காட்சி நடக்கிறது. இதர நிகழ்ச்சிகள் லோக்சபா தேர்தல் அறிவிப்பை பொறுத்து ஆய்வு கூட்டம் நடத்தி தேதி அறிவிக்கப்படும்,” என்றார்.
கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சிவசுப்ரமணிய சாம்ராஜ் சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குனர் அமர்குஷ்வா உட்பட பலர் பங்கேற்றனர்.