பள்ளி மாணவர்களுக்கு செப்டம்பர் 10 முதல் 23-ம் தேதி வரை காலாண்டுத் தேர்வுகள் நடைபெற்றன. 24-ம் தேதி முதல் காலாண்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில், காலாண்டு விடுமுறை நேற்றுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து அனைத்துப் பள்ளிகளும் இன்று (புதன்கிழமை) மீண்டும் திறக்கப்படுகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி திறக்கும் நாளன்றே 2-வது பருவத்துக்கான (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) பாடப்புத்தகங்களும், நோட்டுகளும் வழங்கப்படும் என பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.