சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மரபின கலப்பு முறையில் பிறந்த 4 ஆரஞ்சு நிற குட்டிகளை நேற்று முதல் பார்வையாளர்கள் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி ஆகான்ஷா என்ற 6 வயது பெண் வெள்ளை புலி, 12 வயது விஜய் என்ற ஆரஞ்சு நிற புலியுடன் இணைந்ததால் நான்கு ஆரஞ்சு நிற குட்டிகளை புலிகள் இனப்பெருக்க மையத்தில் ஈன்றது.
இந்த நான்கு அரியவகை புலிக்குட்டிகளை பூங்கா நிர்வாகிகள் பெரும் சிரத்தையுடன் பாதுகாத்து வந்தனர். தற்போது இந்த புலிக்குட்டிகள் தாய்ப்பாலை மறந்து இறைச்சியை உண்ண பழகிவிட்டதால் மற்ற புலிகளுடன் சேர்த்து விடுவதற்கு பூங்கா நிர்வாகிகள் முடிவு செய்தனர். மேலும் இந்த குட்டிப்புலிகளை பார்வையாளர்கள் கண்டுகளிக்க நேற்று திறந்தவெளி அடைப்பிடத்தில் விடப்பட்டன. பார்வையாளர்கள் பலர் இந்த புலிக்குட்டிகளை மிக ஆர்வத்துடன் கண்டு களித்ததோடு தங்கள் செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோக்களையும் எடுத்தனர்.
English Summary : 4 Orange tiger cubs born by Mixed Genetics are allowed to view from yesterday in Vandalur Zoo in Chennai.