தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், அருணோதயா குழந்தை தொழிலாளர் மையம், எக்குடாஸ் தன்னார்வ அமைப்பு ஆகியவை இணைந்து இன்று எண்ணூரில் வேலைவாய்ப்பு முகாம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த முகாமை வடசென்னை பகுதியில் உள்ள வேலையில்லாதவர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

எண்ணூரில் உள்ள ஏ.ஐ.ஆர். திட்டப் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என்றும் 5ஆம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை படித்த 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என முகாம் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

“ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ்’, ஆக்சிஸ் வங்கி, 108 ஆம்புலன்ஸ், யுரேகா ஃபோர்ப்ஸ் உள்பட 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வேலைவாய்ப்பை தர முன்வந்துள்ளது என்றும் இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்கள் முழு விபரங்கள் அடங்கிய பயோடேட்டா 6 நகல்களும் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களையும் எடுத்து வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் இந்த முகாம் குறித்த தகவல்களுக்கு 044-42632264, 9884173377, 9884266716 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

English Summary : Tamil Nadu Slum Clearance Board, Arunodaya child labor center, Aequitas volunteer organization combines to run an employment camp near Ennore.