கடந்த மார்ச் மாதம் பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவ மாணவியர்களுக்கு ஒரிஜினல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுவிட்ட நிலையில் இந்த தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மேலும் தனித்தேர்வர்கள் ஆகியோர்களுக்கு வரும் செப்டம்பர் மாதம் தேர்வு தொடங்கவுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் பிளஸ் 2 செப்டம்பர் தேர்வுக்கான அட்டவணையை அறிவித்துள்ளார். இதன்படி
செப்டம்பர் 28 – தமிழ் முதல் தாள்
செப்டம்பர் 29 – தமிழ் 2-வது தாள்
செப்டம்பர் 30 – ஆங்கிலம் முதல்தாள்
அக்டோபர் 1 – ஆங்கிலம் 2-வது தாள்
அக்டோபர் 3 – இயற்பியல், பொருளாதாரம்
அக்டோபர் 5 – கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நியூட்ரிசன் டயட்டிக்ஸ்
அக்டோபர் 6 – வணிகவியல், மனைஅறிவியல், புவியியல்
அக்டோபர் 7 – வேதியியல், அக்கவுண்டன்சி
அக்டோபர் 8 – உயிரியல், வரலாறு, தாவரவியல், வர்த்தக கணிதம்
அக்டோபர் 9 – கம்யூனிகேட்டிவ் இங்கிலிஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி வேதியியல், சிறப்பு தமிழ்
அக்டோபர் 10 -அனைத்து தொழில் தேர்வுகள், அரசியல் அறிவியல், நர்சிங், புள்ளியியல்
ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறும். இந்த தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணி முதல் பகல் 1-15 மணிவரை நடக்கவுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary:Plus2 Septemper Exam Schedule Announced.