பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்வோர் நாளை (13.09.2023) முதல் விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

அடுத்த ஆண்டு ஜன. 14-ம் தேதி (ஞாயிறு) போகி பண்டிகை தொடங்கி, ஜன. 15-ம் தேதி பொங்கல், 16-ம் தேதி மாட்டுப் பொங்கல், 17-ம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை (செப்.13) முதல் தொடங்குகிறது.

ரயில்வேயில் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளும் வசதி இருக்கிறது. அந்த வகையில்,

  • ஜன.11-ம் தேதி பயணம் செய்ய நாளையும்(செப்.13),
  • ஜன.12-ம் தேதிக்கு செப்.14-ம் தேதியிலும்,
  • ஜன.13-ம் தேதிக்கு செப்.15-ம் தேதியிலும் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம். எனவே, பெரும்பாலானோர் வெள்ளிக்கிழமை மாலையில் ஜன.12-ம் தேதி முதல் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளும் வசதி இருப்பதால், முன்கூட்டியே சிலர் பொங்கலுக்கு ஊருக்கு செல்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறோம். வாய்ப்புள்ள விரைவு ரயில்களில் ஓரிரு பெட்டிகள் கூடுதலாக இயக்கவும் முடிவு செய்துள்ளோம்’’ என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *