அனைத்து மாவட்ட வேலை வாய்ப்புமற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும் 2 அல்லது 3-வது வெள்ளிக்கிழமைகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

அதன்படி, சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து ஏப்ரல் 21-ம் தேதி (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த முடிவு செய்துள்ளன.

இந்த முகாம் கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும்.

இதில் 8, 10, 12-ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித் தகுதியுடைய அனைவரும் கலந்து கொள்ளலாம்.

இந்த முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு பணியிடங்களுக்கு ஆட்களைதேர்வு செய்யவுள்ளனர். விருப்பமுள்ளவர்கள் தங்கள் விவரங்களை www.tnprivatejobs.tn.gov.in எனும் இணையத்தில் பதிவுசெய்ய வேண்டும் என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் வீரராகவ ராவ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *