தமிழகத்தில் 10, 11, 12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று (நவம்பர் 16) காலை 9.30 மணியளவில் வெளியிட்டார்.
அதன்படி 10ஆம் வகுப்புக்கு மார்ச் 26 தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரையிலும், பிளஸ் 1 மாணவர்களுக்கு மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி மார்ச் 25 ஆம் தேதி வரையிலும் தேர்வுகள் நடைபெறுகின்றன. 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது.
பிப்ரவரியில் செய்முறைத் தேர்வுகள்:
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 23 ஆம் தேதி செய்முறைத் தேர்வு தொடங்குகிறது. 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கி 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பிளஸ் 2 செய்முறைத் தேர்வு பிப்ரவரி 12-ல் தொடங்கி பிப்ரவரி 17 வரை நடைபெறுகிறது.
10 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை
பாடங்கள் | தேர்வு தேதி |
தமிழ் | 26.03.2024 |
ஆங்கிலம் | 28.03.2024 |
கணிதம் | 01.04.2024 |
அறிவியல் | 04.04.2024 |
சமூக அறிவியல் | 08.04.2024 |
12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை
பாடங்கள் | தேதி |
மொழிப் பாடம் | 01.03.2024 |
ஆங்கிலம் | 05.03.2024 |
கணினி அறிவியல், உயிரி-அறிவியல், புள்ளியியல், | 08.03.2024 |
வேதியியல், கணக்குப் பதிவியியல், புவியியல் | 11.03.2024 |
இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம் | 15.03.2024 |
கணிதம், விலங்கியல், நுண் உயிரியல் | 19.03.2024 |
உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல், பேஸிக் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல், பேஸிக் சிவில் பொறியியல், பேஸிக் ஆட்டோமொபைல் பொறியியல், பேஸிக் மெக்கானிக்கல் பொறியியல், டெக்ஸ்டைஸ் டெக்னாலஜி, ஆஃபீஸ் மேனேஜ்மென்ட் அண்ட் செக்ரட்டரிஷிப் | 22.03.2024 |
தேர்வு முடிவுகள் எப்போது?
10 ஆம் வகுப்புக்கு மே.10 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. 11 ஆம் வகுப்புக்கு மே.14 ஆம் தேதியும், பிளஸ் 2 மாணவர்களுக்கு மே 6 ஆம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.