சென்னை: பபுக் புயலால் அந்தமான் தீவில் கடும் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சீன கடலில் உருவான பபுக் புயல், வங்க கடலில் நுழைந்துள்ளதால் அந்தமான், தீவில் கடும் கன மழை பெய்யும் எனவும் மேலும், நான்கு நாட்களை பொறுத்தவரை பகலில் வெயிலும், மற்ற நேரங்களில் கடும் குளிரும் நீடிக்கும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
இதற்கிடையில் தென் சீன கடலில் உருவான, ‘பபுக்’ புயல், வங்க கடலுக்குள் நுழைந்துள்ளது. இந்த புயல் இந்திய பகுதியில் மூன்று நாட்கள் சுழலும். அடுத்து தாய்லாந்தில், மூன்று நாட்கள் சுழன்றதும் மியான்மர் நோக்கி செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
புயலால் கடல் கொந்தளிப்பாக காணப்படும். இன்று முதல் 7-ம் தேதி வரை அந்தமான் அருகிலும் புயல் தாக்குவதால் அங்கு கனமழை பெய்யும். மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.