தமிழகத்தில் உள்ள நூலகங்களின் தரத்தை உயர்த்தும் பொருட்டும், வாசகர்களுக்கு மேலும் பயனளிக்கும் வகையிலும் புதிய நூல்களை வாங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி பொது நூலகங்களுக்கு நூல்கள் வாங்குவது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றின் முழுவிபரங்கள் பின்வருமாறு:-
தமிழ்நாடு அரசு பொது நூலக இயக்ககத்தின் கீழ் இயங்கும் நூலகங்களுக்கு 2015ஆம் ஆண்டில் பதிப்பான தமிழ் / ஆங்கிலம் நூல்கள் வாங்க பதிப்பாளர்கள் / விற்பனையாளர்களிடமிருந்து மாதிரி நூல்கள் பரிசீலனைக்காக வரவேற்கப்படுகின்றன. பரிசீலனைக்குப் பெறப்படும் எல்லா நூல்களையும் வாங்குவதற்கில்லை. அரசினால் அமைக்கப்பட்ட நூல் தேர்வுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் நூல்கள் மட்டுமே வாங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படாத நூல்கள் தேர்வு செய்யப்படாமைக்கான காரணம் ஏதும் தெரிவிக்கப்படமாட்டாது. 2015 ஆம் ஆண்டு பதிப்பான தமிழ் / ஆங்கிலம் நூல்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். பிற ஆண்டு நூல்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
மாதிரி நூல்கள் ஏ, பி, மற்றும் சி (குறுந்தகட்டுடன்) படிவங்களுடன் 4.02.2016-க்குள் ‘பொது நூலக இயக்ககம், 737/1, அண்ணா சாலை, சென்னை – 600 002’ என்ற முகவரியில் பெறப்படும்படி அனுப்பி வைக்க வேண்டும். நூல் பதிவு கட்டண விவரம் மற்றும் நூல்கள் சமர்ப்பிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் www.connemarapubliclibrarychennai.com என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary: Purchase of books for public libraries. The last date to send the sample books.