ராஜலக்ஷ்மி குழுமத்தின் அங்கமான, ராஜலக்ஷ்மி ஸ்கூல் ஆஃப் பிசினஸ் (ஆர்.எஸ்.பி) மற்றும் ஹிட்டாச்சி சொல்யூஷன்ஸ் இந்தியா பிரைவட் லிமிடட் இடையே மாணவர்களுக்கான பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.பி மற்றும் ஹிட்டாச்சி இடையிலான இவ்வொப்பந்தம் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு வேலை மற்றும் வேலை சம்பந்தமான பயிற்சிகளை வழங்கும் நோக்கோடு போடப்பட்டுள்ளது.

திரு. சதீஷ் குமார், சீப் மென்டர், ஆர்.எஸ்.பி கூறியதாவது: “சென்னை ஆர்.எஸ்.பி, மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முறை பயிற்சி ஆகியவற்றை வழங்கும் வகையில் பல முன்னனி இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்யவுள்ளது. இதன் ஒரு பகுதியாக முன்னணி நிறுவனமான ஹிட்டாச்சியுடன் ஒப்பந்தமிட்டுள்ளோம். இவ்வகை ஒப்பந்தங்கள் மாணவர்கள் படிக்கும்போதே நடைமுறை பயிற்சி பெற சிறந்த வாய்ப்பாக அமையும்.”

படத்தில், இடமிருந்து வலம்:

திரு. சுபேந்து தே, இயக்குனர், திரு. சதீஷ் குமார், சீப் மென்டர், ஆர்.எஸ்.பி, திரு. அனந்த் சுப்பிரமணியன், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் சாயி புவனேஷ்வரி, விற்பனைகள் இயக்குனர் மற்றும் செயற்குழு தலைவர், ஹிட்டாச்சி சொல்யூஷன்ஸ் இந்தியா.