மேற்குவங்க மாநிலத்தின் முக்கிய நகரமான ஹவுராவுக்கும் சென்னைக்கும் இடையே வாராந்திர சிறப்பு ஏசி சூப்பர் பாஸ்ட் ரயில் ஒன்று இயக்கப்படவுள்ளதாக தென்னக ரயில்வே நேற்று அறிவித்துள்ளது.

தென்னக ரயில்வே நேற்று இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்றில், “ரயில் எண் 02841 என்ற சிறப்பு ரயில் வரும் ஏப்ரல் 28, மே 5,12,19,26 மற்றும் ஜூன் 2,9,16,23,30 ஆகிய தேதிகளில் ஹெளராவில் இருந்து பிற்பகல் 12.40 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 2.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும்.

அதேபோல் மறு மார்க்கத்தில் ரயில் எண் 02842 என்ற சிறப்பு ரயில் வரும் ஏப்ரல் 29, மே 6,13,20,27 ஜூன் 3,10,17,24 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 5.10 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் மாலை 6.30 மணிக்கு ஹெளரா ரயில் நிலையத்தை சென்றடையும்.

இந்த ரயில் கோரக்பூர், கட்டாக், புவனேசுவரம், குர்தா சாலை, விசாகப்பட்டினம், விஜயவாடா ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் பயணிகள் இந்த சிறப்பு ரயிலை பயன்படுத்தி கொள்ளுமாறும் அந்த செய்திக் குறிப்பில் .அறிவிக்கப்பட்டுள்ளது.

English Summary: Special AC Train to Chennai Central – Howra Superfast Express announced by Southern Railway.