அண்மையில் இளையராஜா 80 வது பிறந்தநாள் அன்று கோயம்புத்தூர் கொடிசியா மைதானத்தில் இளையராஜா கச்சேரி பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இதில் மனோ, கார்த்திக், ஸ்வேதா மோகன், SPB சரண், முகேஷ், மதுபாலகிருஷ்ணன், விபாவரி ஜோஷி, யுகேந்திரன் போன்ற 20 கும் மேற்பட்ட பிரபல பாடகர்களும் நூற்றுக்கு மேற்பட்ட மேற்பட்ட இசை கலைஞர்களும் 25000 கும் மேற்பட்ட பார்வையாளர்களுடன் மிக பிரம்மாண்டமாக நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில் ஶ்ரீகாந்த், அம்பிகா, அபிராமி, கங்கை அமரன், தலைவாசல் விஜய், பாலா, அம்மு அபிராமி,  உதயகுமார், வேல்முருகன் போன்ற சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

நிலா காயிது, ஜனனி போன்ற பாடல்களை பாடி இளையராஜா தன் ரசிகர்களை மகிழ்வித்தார் இந்த நிகழ்ச்சியானது வரும் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் இரவு 9:00 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்நிகழ்ச்சியை வழங்குபவர் கிரீன் இன் கிளீன் நிறுவன தலைவர் சிவகுமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *