சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிரமாண்டமாக தயாராகியுள்ள பாஹுபாலி திரைப்படம் வரும் ஜூலை 10ஆம் தேதி அன்று ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் இந்த படம் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம், ஜூலை 17ல் சிவகார்த்திகேயன் நடித்த ‘ரஜினி முருகன்’ படத்தையும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, பாஹுபாலி படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை 10 என உறுதி செய்யப்பட்டால் ரஜினி முருகனின் ரிலீஸ் தேதி இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சரித்திர பின்னணி கதையாக பிரமாண்டமாக தயாராகியுள்ள ‘பாஹுபாலி’ படத்தில் அனுஷ்கா, பிரபாஸ், ராணா, சத்யராஜ், தமன்னா, நாசர் மற்றும் பலர் நடித்துள்ளனர். எம்.எம்.கீரவானி இசையமைத்துள்ள இந்த படத்தை எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கியுள்ளார்.

English Summary : Baahubali release date is on jun 10th so Rajini Murugan film release date will be postponed for another 2 weeks.