‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை கேதரின் தெரஸா, அடுத்து விஷ்ணு நடிக்கவுள்ள வீர தீர சூரன்’ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

வீர தீர சூரன்’ படத்தை முதலில் சுசீந்திரன் இயக்குவதாகத்தான் இருந்தது. ஆனால் அதன் பின்னர் படத்தின் தயாரிப்பாளர் இந்த படத்தை இயக்கும் பொறுப்பை ஷங்கர் தயாளன் என்பவரிடம் கொடுத்துவிட்டார். இவர் ஏற்கனவே கார்த்தி நடித்த சகுனி’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஷ்ணு-கேதரின் தெரஸா கெமிஸ்ட்ரி மிகவும் அபாரமாக அமைந்துள்ளதாக கூறும் படத்தின் இயக்குனர் முதல் போட்டோஷூட்டிலேயே இந்த ஜோடியின் பொருத்தம் மிகவும் அருமையாக இருந்ததாக தெரிவித்தார். மெட்ராஸ் படத்திற்கு பின்னர் கேதரின் தெரஸாவுக்கு இந்த படம் ஒரு பெரிய திருப்புமுனையை அளிக்கும் விதமாக அமையும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர். கேதரின் தெரஸா தற்போது ருத்ரம்மாதேவி, கணிதன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

அதேபோல் விஷ்ணு விஷாலும் ஏற்கனவே இடம் பொருள் ஏவல், கலக்கற மாப்ளே, இன்று நேற்று நாளை மற்றும் போடா ஆண்டவனே என் பக்கம்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary : Madras heroine is going to starred with Vishnu