rajini-281115சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்றபோது மலேசிய பிரதமர் முதல் சாதாரண மலேசிய குடிமகன் வரை அனைத்து தரப்பினர்களும் ரஜினியின் மலேசிய வருகைக்கு மகிழ்ச்சி தெரிவித்திருந்தனர். அவருடன் புகைப்படம் எடுக்கவும், செல்பி எடுக்கவும் அனைவரும் ஆர்வம் கொண்டனர். மலேசிய அமைச்சர் ரஜினிக்கு மதிய விருந்து அளித்த சம்பவமும் நடந்தது. இந்நிலையில் ரஜினி குறித்தும் ரஜினியின் படங்கள் குறித்தும் மலேசிய அமைச்சர் ஒருவர் மலேசிய பாராளுமன்றத்தில் பேசியுள்ளார்

மலேசிய எம்.பி, Datuk Abdul Azeez Abdul Rahim என்பவர் நேற்று மலேசிய பாராளுமன்றத்தில் ரஜினியின் புகழ் குறித்து ஒருசில நிமிடங்கள் பேசியுள்ளார். அவர் தன்னுடைய பேச்சில் ரஜினி குறித்தும் ரஜினியின் சூப்பர் ஹிட் படமான ‘பாட்ஷா’ குறித்தும் அதில் இடம்பெற்ற ‘நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி’ என்ற வசனம் குறித்தும் பேசியதாக செய்திகள் வெளிவதுள்ளது.

மலேசிய எம்.பி, Datuk Abdul Azeez Abdul Rahim அவர்களின் இந்த பாராளுமன்ற பேச்சுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது என்றும் அவர் ரஜினி குறித்து பேசி முடித்ததும் பெரும் அளவில் மலேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கைதட்டியதாகவும் உலகின் எந்த நடிகருக்கும் கிடைத்திராத ஒரு பெருமை இது என்றும் கூறப்படுகிறது.
english summary-Malasian MP talks about rajini’s bacha movie