பிளஸ் 2 முடித்தவுடன் ஆசிரியர் பணிக்கு செல்ல விரும்பும் மாணவ மாணவிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள படிப்பு ஒருங்கிணைந்த 4 ஆண்டுகள் பி.எஸ்ஸி., பி.எட்., பி.ஏ.,பி.எட். படிப்புகள் ஆகும். இந்த படிப்பை முடித்துவிட்டு நேரடியாக ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். தற்போது இந்த படிப்புக்கான நுழைவுத் தேர்வு வரும் ஜூன் 7-ஆம் தேதி நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தென்மண்டல பகுதி மாணவர்களுக்கு கர்நாடக மாநிலம், மைசூரில் உள்ள மத்திய அரசின் மண்டல கல்வி நிறுவனத்தில் மட்டுமே இந்த படிப்பு படிக்கும் வசதி உள்ளது. நுழைவுத் தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில் இந்த படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த படிப்புக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் மாணவ, மாணவிகள் www.rieajmer.raj.nic.in என்ற இணையதளத்தின் மூலம் அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

ஆன்-லைனில் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து மே 11ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மே 14-ஆம் தேதி முதல் ஹால் டிக்கெட்டுக்களை ஆன்லைன் மூலம் டவுன்லோடு செய்து கொள்ளலாம். ஜூன் 7-ஆம் தேதி நடத்தப்படும் நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

English Summary : Rare opportunity to join in the work of the Teacher plus 2 finishes