புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி,

  • நட்சத்திர ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகளில், 80% வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
  • குடித்துவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம்; மீறினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும்.
  • சிறுவர்கள், பெரியவர்களை அச்சுறுத்தும் வகையில் பைக் உள்ளிட்ட வாகனங்களை இயக்கினால் நடவடிக்கை பாயும்.
  • நட்சத்திர விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் நள்ளிரவு 1 மணிக்குள் புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்துக் கொள்ள வேண்டும்.
  • நட்சத்திர விடுதி மற்றும் பார்களில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், சிறுமிகளுக்கு அனுமதி இல்லை
  • புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பட்டாசுகள் வெடிக்கத் தடை இல்லை; ஆனால், கண்காணிக்கப்படும்.
  • சென்னை மெரினா உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்.
  • டிசம்பர் 31ஆம் தேதி இரவு 8 மணிக்கு மேல் மெரினா, சாந்தோம், பெசன்ட்நகர், எலியட்ஸ், காசிமேடு, திருவொற்றியூர் உள்ளிட்ட கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *