riponசென்னையில் குப்பை அகற்றும் பணிகள் நவீன முறையில் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த பணிகளை கண்காணிக்க சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டடத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டுப்பாட்டு அறையில் இருந்து கொண்டே சென்னை நகர் முழுவதிலும் நடைபெற்று வரும் குப்பை அகற்றும் பணிகளை கண்காணிக்க முடியும் என கூறப்படுகிறது.

சென்னையில் குப்பை அகற்றும் பணிகள் சரிவர கண்காணிக்கப்படாமல், மாநகர் முழுவதும் குப்பைகள் தேங்கி இருந்த நிலையில் இந்த நிலையை பல்வேறு நவீன டெக்னாலஜி மூலம் செய்யப்பட்டு வந்தது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப வாட்ஸ் அப் இணையதளம், “ஸ்மார்ட் போன்கள்’ ஆகியவை மூலம் குப்பை அகற்றும் பணிகளைக் கண்காணிக்கும் நடைமுறை சமீபத்தில் நடைமுறைக்கு வந்தது.

அதன் பின்னர், குப்பைத் தொட்டிகளை தினந்தோறும் சம்பந்தப்பட்ட துப்புரவு ஆய்வாளர் படம் எடுத்து உயரதிகாரிகளுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது. இதன்மூலம் குப்பைகள் அகற்றப்படுவதை எளிதாக அதிகாரிகள் கண்காணித்து அவ்வப்போது தகுந்த ஆலோசனைகளையும் கூறி வந்தனர். மேலும், ஆண்ட்ராய்ட் செயல்பாட்டுத் தளத்தில் இயங்கக்கூடிய அப்ளிகேஷன் ஒன்றையும் சமீபத்தில் சென்னை மாநகராட்சி வெளியிட்டது.  “கிளீன் சென்னை’ என்ற அப்ளிகேஷன் தற்போது சோதனை முயற்சியாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி குப்பைத் தொட்டிகளின் நிலை குறித்து பொதுமக்களே மதிப்பீடு வழங்க முடியும். இந்த நிலையில், குப்பை அகற்றும் பணியை தலைமையகத்தில் இருந்து குப்பை அகற்றும் பணிகளை கண்காணிக்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை ஒன்று ரிப்பன் கட்டடத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியபோது, “குப்பை லாரிகளில் ஜிபிஎஸ் கருவி உள்ளது. மேலும், குப்பை கொட்டும் வளாகங்கள், மாநகராட்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் கண்காணிப்புக் கேமராக்கள் உள்ளன. ஆனாலும், இவை இதுவரை கண்காணிக்கப்படவில்லை. தற்போது அமையும் கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறே லாரிகளின் போக்குவரத்து, குப்பை கொட்டும் வளாகங்களின் செயல்பாடு போன்றவற்றை கண்காணிக்க முடியும் என்றனர்.

English Summary:Ribbon House control room to monitor the debris removal process.