thalaகூகுள் இணையதளம் அவ்வப்போது ஒவ்வொரு பகுதியிலும் அந்த பகுதியில் அதிகம் தேடப்பட்டவர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இவ்வருடத்தில் கடந்த ஆறு மாதங்களில் பெங்களூர் உள்பட கர்நாடக மாநிலத்தில் அதிகம் தேடப்பட்ட திரை நட்சத்திரங்கள் குறித்த பட்டியல் ஒன்றை கூகுள் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் டாப் 10 பட்டியலில் உள்ள நடிகர்களில் கன்னட நடிகர் ஒரே ஒருவர் மட்டுமே உள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மீதி ஒன்பது இடங்களை தமிழ், மற்றும் தெலுங்கு நடிகர்களே கைப்பற்றி உள்ளனர்.

இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்த நடிகராக அஜீத் அறிவிக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் அஜீத் ரசிகர்கள் அதிகம் இல்லாத நிலையில் இந்த அறிவிப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. என்னை அறிந்தால்’ படத்தில் அஜீத்தின் ஸ்டைல் லுக் மற்றும் அந்த படத்தின் டீஸர், டிரெய்லர் ஆகியவை அஜித் கர்நாடக மக்களை கொஞ்சம் அதிகமாகவே ஈர்த்துள்ளதாகவும் அதன் காரணமாக அவர்  முதலிடத்தை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. அஜீத்தை அடுத்து பாகுபலி நாயகன் பிரபாஸ் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார். மேலும் அல்லு அர்ஜூன், ரஜினிகாந்த், தனுஷ், மகேஷ்பாபு, விக்ரம், சுதீப், பவன்கல்யாண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் முதல் பத்து இடங்களில் இடம் பெற்றுள்ளனர். தென்னிந்தியாவில் அதிக ரசிகர்களை கொண்ட இளையதளபதி  விஜய் பெயர் இந்த பட்டியலில் இல்லாதது அனைவரையும் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் நடிகைகளின் பட்டியலில் முதல் இடத்தில் காஜல் அகர்வால் உள்ளார். இவரை அடுத்து அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, சமந்தா, நயன்தாரா, த்ரிஷா, ரம்யா, ப்ரியாமணி, சினேகா மற்றும் பாவனா மேனன் ஆகியோர் உள்ளனர். கூகுள் நிறுவனம் எந்த அடிப்படையில் இந்த பட்டியலை தயார் செய்தது என்பது குறித்த தகவலை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary:Ajith First Place In Google Top 10 List.