உலகின் நம்பர் ஒன் தேடுதள இணையதளமாக விளங்கி வரும் கூகுள் நிறுவனத்திற்கு சமீபத்தில் சென்னையை சேர்ந்த சுந்தர் பிச்சை தலைமைச் செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தற்போது சுந்தர்பிச்சை அமெரிக்காவிலேயே அதிகம் சம்பளம் பெறும் நிர்வாகியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனம் சுந்தர் பிச்சைக்கு 1,353 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை அளித்துள்ளது. இதன் மூலம் சுந்தர் பிச்சை இந்த பெருமையை பெற்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் புகழ் பெற்று தந்துள்ளார். அமெரிக்காவில் ஒரு இந்தியர் அதிக சம்பளம் பெறும் நிர்வாகியாக மாறியுள்ளது ஒவ்வொரு இந்தியனுக்கும் கிடைத்த பெருமை என்பது குறிப்பிடத்தகக்து.

பிப்ரவரி 3ஆம் தேதி ஆல்பபெட் நிறுவனத்திடமிருந்து 2,73,328 கிளாஸ் சி பங்குகளை சுந்தர் பிச்சை பெற்றுக் கொண்டார். இதுவரை இவ்வளவு மதிப்புள்ள பங்குகளை எந்த ஒரு நிர்வாகிக்கும் கூகுள் நிறுவனம் வழங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சுந்தர்பிச்சையை தவிர ஆல்பபெட் நிறுவனம் 4.28 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள பங்குகளை வி.எம்.வேரின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் துணை நிறுவனர் டாயனே கிரினே ஆகியோர்களுக்கும் வழங்கியுள்ளது.

கூகுள் நிறுவனர்களான லாரி பேஜ் அவர்களுக்கு 3,460 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள பங்குகளும் மற்றொரு நிறுவனரான செர்கிரி பிரின் என்பவருக்கு 3,390 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள பங்குகளும் உள்ளன.

English Summary: Rs.1,353 Crore shares are given to Sundar Pichai by Google Company.