11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான மாதிரி வினாத்தாள் இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 16ம் தேதி முதல் ஏப்ரல் 20ம் தேதி வரையிலும், பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் 7ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 16ஆம் தேதி வரையிலும்,பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஒரு மதிப்பெண் வினாக்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இதுவரை, 4 விடைகளுள் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் Choose the best answerஇருக்கும். ஆனால், தற்போது ஒரு மதிப்பெண் வினாக்களில் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக(Fill in the blanks), பொருத்துக(Match the following), சரியான வாக்கியம் மற்றும் அதன் காரணம்(Assertion & Reason)’ போன்றவை இடம் பெறுகின்றன.
ஏற்கனவே முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மானவர்க்ளின் நலன் கருதி இதற்கான மாதிரி வினாத்தாள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனைபள்ளிக்கல்வித்துறை அமைச்சர்செங்கோட்டையன் தெரிவித்தார். மாதிரி வினாத்தாளை பெற மாணவ, மாணவிகள் http://www.tn.gov.in/schedu/, http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளங்களைகாணலாம்.