சென்னை: அரசு கேபிள் ‘டிவி’ நிறுவனத்தின், டிஜிட்டல் சிக்னலை வினியோகம் செய்ய விருப்பமுள்ளோர் வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: அரசு கேபிள் ‘டிவி’ நிறுவனத்தின் டிஜிட்டல் சிக்னலை வினியோகம் செய்ய சென்னை உள்ளிட்ட 32 மாவட்டங்களில் 114 பகுதிகளுக்கு வினியோகஸ்தர்கள் தேவை.

இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ள கேபிள் ஆப்பரேட்டர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை, www.tactv.in மற்றும் www.tenders.tn.gov.in என்ற இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ‘தமிழ்நாடு அரசு கேபிள் ‘டிவி’ நிறுவனம், 34/123, மார்சல் சாலை, துர்கா டவர்ஸ், ஆறாவது தளம், எழும்பூர், சென்னை – 8′ என்ற முகவரிக்கு, வரும், 20ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *