சாம்சங் ஸ்மார்ட் போன் விற்பனையில் ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது. 82.4 மில்லியன் ஸ்மார்ட் போன்களை 2015-ந்தின் முதல் காலாண்டில் விற்பனை செய்துள்ளது சாம்சங் நிறுவனம், மொத்த ஸ்மார்ட் போன் விற்பனையில் 24.5 சதவீதமாகும். கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இது 7 சதவீதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிளின் விற்பனை 2014-ம் ஆண்டின் இறுதி காலாண்டை ஒப்பிடும் போது சரிந்துள்ளது. இந்த காலாண்டில் 61.2 மில்லியன் ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்துள்ளது இந்த நிறுவனம்.

அனைத்து நிறுவனங்களையும் சேர்த்து 16.7 சதவீதம் ஸ்மார்ட் போன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இந்த காலாண்டில் மட்டும் 337 மில்லியன் ஸ்மார்ட் போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

English Summary: Samsung Smart Phone picks first place by dropping Apple to second place in Smartphone selling this year.