கடந்த 2012ஆம் ஆண்டு சிம்பு கடைசியாக நடித்து வெளியான போடா போடி’ படத்திற்கு பின்னர் அவர் நடித்த திரைப்படம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேல் ரிலீஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சிம்பு ரசிகர்களை குஷிப்படுத்த வரும் மே 9ஆம் தேதி அவர் நடித்த ‘வாலு’ திரைப்படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் ‘வாலு’ திரைப்படம் அஜீத்தின் பிறந்த நாளான மே 1ஆம் தேதிதான் ரிலீஸாக இருந்தது. ஆனால் அந்த தேதியில் கமல்ஹாசனின் ‘உத்தம வில்லன்’ ரிலீஸ் உறுதி செய்யப்பட்டதால் படத்தின் ரிலீஸ் தேதி மே 9 என முடிவு செய்யப்பட்டது. அஜீத்தின் வெறித்தனமான ரசிகரான சிம்பு, அஜீத் பிறந்த நாளில் தனது படம் ரிலீசாகவில்லை எனினும், படத்தின் இன்னொரு டிரைலரை மே 1ஆம் தேதி ரிலீஸ் செய்ய விருப்பப்பட்டார் என்றும் அவருடைய விருப்பத்திற்கிணங்க நாளை ‘வாலு’ படத்தின் இரண்டாவது டிரைலர் ரிலீஸாகும் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

சென்னையில் உள்ள ரயில்வே குவார்ட்டர்ஸில் குடியிருக்கும் ஒரு இளைஞனுக்கு ஏற்படும் காதல் தான் ‘வாலு’ படத்தின் கதை. நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்தில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம், விடிவி கணேஷ், பிரம்மானந்தம் உள்பட பலர் நடித்துள்ளனர். விஜய் சந்தர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்துள்ளார்.

English Summary: Vaalu Trailor is going to release on Ajith’s Birthday May 1st.