கடந்த மாதம் 22ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி – சி 34 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன. இந்த ராக்கெட்டில் 22 செயற்கைகோள்கள் இணைக்கப்பட்டிருந்தன. இவற்றில் ஒன்றான ‘சத்யபாமாசாட்’ என்ற செயற்கைக் கோள் சென்னை அருகேயுள்ள சத்யபாமா பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கியது.
பசுமை வாயுக்கள் மற்றும் புவி வெப்பமயமாதல் குறித்து ஆய்வு செய்வதற்காக இந்த சாட்டிலைட்டை சென்னை சத்யபாமா பல்கலைக்கழக மாணவர்களான புலிநிகால் ரெட்டி, ராகலபள்ளி ரெட்டி தருண், சச்சா ஸ்ரீஹரி, ராஜா பிரீதம், சவுமியா ரஞ்சன்தாஸ் ஆகியோர் இணைந்து உருவாக்கினர். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்திடம் (இஸ்ரோ) இந்த செயற்கைக் கோள் கடந்த ஏப்ரல் 30-ம் தேதி ஒப்படைக்கப்பட்டது.
கடந்த மாதம் செலுத்தப்பட்ட இந்த ‘சத்யபாமாசாட்’ செயற்கைக் கோள், விண்ணில் இருந்து தொடர்ச்சியாக தகவல்களை அனுப்பிய வண்ணம் உள்ளது.
இந்நிலையில், இந்த செயற் கைக்கோளை உருவாக்கிய மாணவ, மாணவிகளுடன் சத்யபாமா பல்கலைக்கழக இயக்குநர் மரிய ஜீனா ஜான்சன், துணைவேந்தர் பி.ஷீலாராணி, உதவி பேராசிரியர் வசந்த் ஆகியோர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்தனர். பசுமை வாயுக்கள் குறித்து ஆய்வு செய்வதற்கான செயற்கைக் கோளை உருவாக்கியதற்காக மாணவர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
English Summary : Satybama University made satellite. Students praise for Modi