உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் மற்றும் தென்னிந்தியா மற்றும் பாலிவுட்டின் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் சமீபத்தில் ஜீ தொலைக்காட்சியில் சிம்ப்ளி குஷ்பு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நடிகை குஷ்பு கேட்ட கேள்விகளுக்கு ஸ்ருதிஹாசன் சுவாரசியமாக பதிலளித்தார்.
முதலாவதாக தனது திருமணம் குறித்து கருத்து கூறிய ஸ்ருதிஹாசன், ‘தனது வருங்கால கணவர் உண்மையானவராகவும், நல்ல குணம் கொண்டவராகவும் இருக்க வேண்டும் என்றும் அதுமட்டுமின்றி கண்டிப்பாக அவருக்கு முகத்தில் தாடி இருக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் தனக்கு மிகவும் பிடித்தமானது தாயாக மாறுவது என்றும் தனக்கு மட்டுமின்றி ஒவ்வொரு பெண்ணுக்கும் தாயாகும் நிலை ஒரு பெருமைக்குரியது என்றும் கூறினார்.
மேலும் அஜீத், விஜய், சூர்யா குறித்து கருத்து கூறிய ஸ்ருதிஹாசன் அஜீத்தை ஹேண்ட்சம் ஸ்டார் என்றும், விஜய்யை ஹாட் ஸ்டார் என்றும், சூர்யாவை ரொமாண்டிக் ஸ்டார் என்றும் கூறினார்.
தந்தை கமல்ஹாசன் மற்றும் தங்கை அக்ஷராவுடன் நடிக்க தனக்கு விருப்பம் என்றும் அதற்கான கதை அமைந்தால் எப்பொழுது வேண்டுமானாலும் அவர்களுடன் நடிக்க தயார் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் தனக்கு பாம்பு, பல்லி என்றால் அதிக பயம் என்றும் உலகின் மிகப்பெரிய இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் கூப்பிட்டால்கூட பாம்பு படத்தில் நடிக்க மாட்டேன்’ என்றும் அவர் கூறினார்.
english summary-Shruthi hassan speaks about her future partner