சிம்பு, ஹன்சிகா நடித்து வரும் ‘வாலு’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் முடிவாகாத நிலையில் அவர் நடித்து வரும் ‘அச்சம் என்பது மடமையடா’ படப்பிடிப்பின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நேற்று முடிவடைந்துள்ளது. மேலும் சிம்பு இன்னும் சில நாட்களில் செல்வராகவன் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார்.
இந்நிலையில் சமீபகாலமாக ஒருசில ஊடகங்களில் சிம்பு நடிக்கவிருந்து பின்னர் கைவிடப்பட்ட ‘கெட்டவன்’ திரைப்படத்தை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. இந்த படத்தின் இயக்குனர் நந்து சமீபத்தில் சிம்புவை சந்தித்து இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல்கள் வெளிவந்தன.
இந்நிலையில் சிம்பு இதுகுறித்து தற்போது விளக்கமளித்துள்ளார். “‘கெட்டவன்’ படத்தை மீண்டும் தொடங்கும் திட்டம் எதுவும் இல்லை. தற்போது ‘அச்சம் என்பது மடமையடா’, செல்வராகவன் இயக்கும் இன்னும் பெயர் வைக்கப்படாத படம் ஆகிய படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறேன். இப்படங்களின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. நேற்றுடன் அச்சம் என்பது மடமையடா’ படத்தின் 2ஆம் கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் முடிவடைந்தது. எனவே சென்னை திரும்பியவுடன் ‘வாலு’ படத்தின் வெளியீட்டு தேதியை முடிவு செய்து அறிவிக்க இருக்கிறேன். தொடர்ச்சியாக அடுத்தடுத்து படப்பிடிப்புகள் இருப்பதால் கெட்டவன் படத்தை மீண்டும் தொடங்கும் பேச்சுக்கே இடமில்லை’ என்று கூறியுள்ளார்.
சிம்புவின் விளக்கத்தை தொடர்ந்து கெட்டவன் படம் குறித்து எழுந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக கூறப்படுகிறது.
English Summary : Simbu said there is no idea in continuing “Kettavan” project and focus on “Acham enbathu Madamaiyada”.